General23 August 2024

கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் விரட்டியடிப்பு!

மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்றையதினம்(22) மாலை இந்த யானைக் கூட்டம் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.

இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்தனர்.

இதன் பின்னர் குறித்த யானைக் கூட்டம் காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related recommendation
Hiru TV News | Programmes