சிறிய ரக மின்சார உற்பத்தி நிலையங்கள் - வன முறைமைகள் பாதிப்பு...

Saturday, 22 October 2016 - 8:52

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
சிறிய ரக மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மானிப்பதன் மூலம் இலங்கையின் வன முறைமைகள் பாதிப்படையும் என சுற்றுச்சுழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஆய்வு மாநாட்டொன்றில் உரையாற்றும் போதே 2 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சி மூலம் மின்சார உற்பத்தியினை சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் போது அதன் இருமருங்கிலும் உள்ள தடுப்புக்கள் பாதிப்படைகின்றன எனவும் சுற்றூற்றுழல் விஞ்ஞானிகளான ஈ ஐ எல் சில்வா மற்றும் ஈ என் எஸ் சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சிகளின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படுவதனால் நீர் வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வில் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மாற்றாக பாதுகாப்பை வழங்க கூடிய முறைமைகள் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.