பப்புவா நியூ கினியில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

Monday, 15 April 2024 - 17:34

%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%21
பப்புவா நியூ கினியில் சக்திவாய்ந்த நில அதிர்வு ! பப்புவா நியூ கினியின் வடக்குப் பகுதியில் இன்று (15) காலை 6.56 மணியளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 
 
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. 
 
இந்த நில அதிர்வு நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே 110 கிலோமீற்றர் தொலைவில், 64 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனினும், இதனால் ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க நில அதிர்வு அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.