தென் ஆப்ரிக்க அணி 39 ஓட்டங்களினால் வெற்றியை தனதாக்கியது!!

Sunday, 22 January 2017 - 13:36

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+39+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%21%21
தென் ஆப்ரிக்காவில் இடம்பெற்று வருகின்ற 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான முக்கோண கிரிக்கட் போட்டியில் 39 ஓட்டங்களினால் தென் ஆப்ரிக்க அணி, வெற்றியை தனதாக்கியுள்ளது.

இலங்கை அணிக்கும்  தென் ஆப்ரிக்க அணிக்கும் இடையில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்ரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணி 41 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணி வெற்றியை தனதாக்கியது.