பிரபல இசையமைப்பாளர் மரணம் - திரையுலகினர் அஞ்சலி

Wednesday, 20 September 2017 - 17:41

+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF
மூத்த பிரபல இசையமைப்பாளர் கோவர்த்தன் காலமானார்.

பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தன்.

இவர் சொந்த ஊரான சேலத்தில் நேற்று காலமானார்.

இவருக்கு வயது 91. இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி தொகை ரூ.10 லட்சத்தை இவருக்கு வழங்கியுள்ளார்.

தென்னிந்திய அளவில் ஆர்மோனியம் வாசிப்பதில் மிகத் திறமையானர்.

சிவாஜி நடித்த ‘புதிய பறவை’ படத்தில் ரீ ரெக்கார்டிங்ககின் போது இவர் மீது மின்சாரம் பாய்ந்து இவருக்கு காது கேட்காமல் போனது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் வெளிவந்த ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தவர்.

இசையமைப்பாளர்கள் கே.வி. மாகாதேவன், இளையராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சந்திரபோஸ், தேவா உள்ளிட்டோர் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவரது சொந்த ஊரான சேலம், குகைப்பாலம் பகுதியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.