இதுபோன்ற பிடியெடுப்பை பார்த்துள்ளீர்களா?? கிரிக்கட் உலகை மிரள வைத்த ஆபூர்வ பிடியெடுப்பு - வைரலாகும் காணொளி

Tuesday, 23 January 2018 - 10:49

%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%3F%3F+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் பிக்பேஸ் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் எட்லெட் ஸ்ரைக்கர்ஸ் அணி மற்றும் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிகள் ​மோதின.

இந்த போட்டித் தொடரின் 35வது போட்டியாக இடம்பெற்ற இந்த போட்டியில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி 26 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய எட்லெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதனை தொடர்ந்து 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மெல்பர்ன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிராவோ அடித்தாடிய பந்தை ஆறு ஓட்ட எல்லையில் வைத்து இரண்டு வீரர்கள் பிடியெடுப்பாக மாற்றியிருந்தனர்.

சுழற்பந்து வீச்சாளரான ரஷீட் கான்னின் பந்திற்கு பிராவோவால் அடித்தாடப்பட்ட பந்து நான்கு ஓட்ட எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பென் லாஹ்லினால் பிடியெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் , அவரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எல்லைக்கு மறுபக்கத்திற்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

அதன் போது , பந்தை அவர் வேகமாக மைதானத்தை நோக்கி தூக்கி எரிந்தார்.

அங்கு களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த ஜேக் வேதரோட் விரைந்து குறித்த பந்தை அபூர்வமான பிடியெடுப்பாக மாற்றி பிரோவோவை ஆட்டமிழக்கச் செய்தார்.

குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.