தேசிய அரசாங்கம் காலாவதியான அரசாங்கமாக மாறியுள்ளது

Tuesday, 20 February 2018 - 8:27

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் காலாவதியான அரசாங்கமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தற்போது அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால் நாட்டில் மேலும் பிரச்சினைகள் பல உருவாகக் கூடும் என எச்சரிக்கை விடுத்தார்.