ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

Sunday, 24 June 2018 - 19:44

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
பெயரிடப்படும் பழ மரங்களை அத்தாட்சிப் பத்திரமின்றி வெட்டுவதை தடைசெய்யும் திட்டமொன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை தொகுதி அமைப்பினை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய உற்பத்திகளுக்கு கூடிய பெறுமதியை பெற்றுக்கொடுத்தலே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்.

உள்நாட்டு பழ உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த திட்டம் அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வறுமையை இல்லாதொழித்து, சகலருக்கும் அனுகூலங்களை பெற்றுத்தரும் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கின்றதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.