வடகொரியாவுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா

Friday, 21 September 2018 - 11:11

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
அணு ஆயுதங்களை அழிக்க வடகொரிய அதிபர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அந்நாட்டுடன் உடனடி பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதனை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டது.

அதன் அடிப்படையில், அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அணு ஆயுத சோதனையை நிறுத்த ஒப்புக்கொண்டார்.

வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உலக அணு ஆயுத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் முற்றிலும் நிறுத்த கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.