இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை ஒரு போதும் தீர்க்க முடியாது

Saturday, 20 October 2018 - 8:11

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையானது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினையாகும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், திருவண்ணாமலை சாய்பாபா ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினையானது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாகும் எனத் தெரிவித்துள்ள அவர், அது ஒருநாளும் முடிவுக்கு வராத பிரச்சினையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வடக்கு, கிழக்கில் இன்னும் 20 சதவீத காணிகள் மட்டுமே பாதுகாப்புத் தரப்பினர்வசம் உள்ளதாகவும், அந்தக் காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.