தானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறப்பு

Saturday, 20 October 2018 - 13:30

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இரத்தினபுரி எம்பிலிப்பிட்டியவில் தானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

285 மில்லியன் ரூபா செலவில் இந்த தானிய பாதுகாப்பு மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பிலிப்பிட்டிய விவசாயிகளின் தானிய்ங்களை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மத்திய நிலையத்தை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று திறந்துவைத்தார்.

அனுராதபுரம், மன்னார், புத்தல மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான தானிய பாதுகாப்பு மத்திய நிலையஙகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எதிர்வரும் காலத்தில் மற்றுமொரு மத்திய நிலையம் பொலநறுவையில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.