ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதியை இன்று காலை சந்தித்த கூட்டமைப்பு!

Wednesday, 12 December 2018 - 13:09

%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இன்றையதினம் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரைத்து, அவருக்கு ஆதரவளிக்கும் வகையிலான நம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏலவே அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் மீள ஸ்தாபிக்கப்படுவதற்கு ஒத்துழைக்கும் வகையில், இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக கூட்டமைப்பின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பார்வையாளர் கூடம் மற்றும் விசேட விருந்தினர் கூடம் என்பனவும் மூடப்பட்டிருக்கும்.

எனினும் ஊடகவியலாளர்களுக்கு எந்த தடையும் இல்லை என்றும் நாடாளுமன்றின் படைக்கல சேவிதர் அறிவித்துள்ளார்.