விமானத்தால் கையாளப்பட்ட சரக்கு விபரம்

Sunday, 08 February 2015 - 13:14

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கடந்த 2014ஆம் ஆண்டு விமான மூலம் கையாளப்பட்ட சரக்கு தொடர்பான தரவுகளை சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வெளியிட்டுள்ளது.

இதற்கு அமைய 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு கையாளப்பட்ட சரக்குகளின் பிரமாணம் 4.5 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிவிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த விமான சேவைகள் மூலமே அதிக அளவிலான சரக்குகள் ஏற்றி இறக்கப்படுவதாகவும் அந்த சங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் விமான மூலம் சரக்குகளை அனுப்பும் நடவடிக்கைகளில் தொய்வு நிலை இருந்த போதிலும், அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.