மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு

Thursday, 02 April 2015 - 15:41

%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல பகுதிகள் மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகன சாரதிகள் வீதி தெளிவாக தெரியாமையால் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மேலும் விபத்துகள் ஏற்படும் சாத்தியமும் அதிகரித்துள்ளது. டுபாயும் மணல் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி கட்டார் மற்றும் சவுதியின் பல பகுதிகளில் மணல் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




தமாம், கோபார், ஜூபைல் போன்ற முக்கிய நகரங்களில் வீதிப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தாக தெரியவருகின்றது.

அது மட்டுமின்றி விமான போக்குவத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  




பொதுமக்கள் வீடுகளில் இருக்கும்படியும் , வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளும்படியும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.