ஒபாமாவின் மின்னஞ்சல்கள் ரஷ்யர்களால் ஊடுறுவல்

Sunday, 26 April 2015 - 15:00

%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகை கணனிகளை, இணைய வழி முடக்கல் செய்த ரஷ்ய முடக்கல்காரர்கள் பல தகவல்களை பெற்றுள்ளதாக “நியூயோக் ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தியோகபூர்வமற்ற தொலைநகல் செய்திகளை அவர்கள் முடக்கி அறிந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இணைய வழி முடக்கல் தொடர்பான தகவல் வெளியானதனை அடுத்து, வெள்ளை மாளிகையின் கணனி வலைப்பின்னலின் பல பகுதிகள் அதிகாரிகளினால் செயலிழக்க வைக்கப்பட்டது.

எப்படியிருப்பினும், அமெரிக்க பாதுகாப்பு போன்ற விடயங்கள் குறித்து எந்த விதமான தகவல்களும் ரஷ்ய முடக்கல் காரர்களின் கைக்கு கிடைக்கவில்லை எனவும் “நியூ யோக்” டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.