இலங்கையர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் மரணதண்டனை

Wednesday, 29 April 2015 - 9:43

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகியோருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் உள்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை மரண தண்டனைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளில் 9 வது நபரான பிலிப்பீன்ஸ் பெண்ணொருவருக்கு இறுதிநேரத்தில் மரணத்தண்டனை பிற்போடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமை பெற்ற மயுரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவிற்கான தூதுவரை அவுஸ்திரேலியா மீள அழைத்துள்ளது.

இந்த சம்பவம் கொடூரமானதும், அனாவசியமான செயற்பாடு எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபட் குற்றம்சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், போதை பொருள் கடத்தல்கள் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்து இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ பொது மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.