பிரித்தானிய பொதுத் தேர்தல் பெறுபேறுகள்

Friday, 08 May 2015 - 13:57

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நேற்று நடைபெற்றிருந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் பெறுபேறுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதுவரையில் 560 ஆசனங்கள் உத்தியோகபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஆளும் கட்சியாக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 262 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ள அதேநேரம், தொழில் கட்சி 214 ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சி 55 ஆசனங்களை பெற்றுள்ள.

இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியே இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்த தேர்தலில் ஸ்கொட்லாந்தை சேர்ந்த 20 வயதான ஒருவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதன் மூலம் 1667ஆண்டுக்கு பிறகு, பிரித்தானியாவின் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகும் இளவயது உறுப்பினர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.