இங்கிலாந்துக்கு வெற்றி

Tuesday, 26 May 2015 - 8:52

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 124 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நேற்றைய இறுதி நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இனிங்சில் 345 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  நியூசிலாந்து அணி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து தமது முதலாவது இன்னிங்சில் 389 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 478 ஓட்டங்களையும் பெற்றது.

நியூசிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்சில் 523 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் சிறப்பாட்டகாரராக Benjamin Andrew Stokes தெரிவு செய்யப்பட்டார்.

இதன்படி, இரு அணிகளுக்கும் இங்கிலாந்தின் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.