அசாட் சபீக் 131 ஒட்டங்கள்

Saturday, 20 June 2015 - 21:00

%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+131+%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

இந்தநிலையில், தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 63 ஒட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும்  இழந்து 417 ஒட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அசாட் சபீக் 131 ஒட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதனிடையே, தமது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 300 ஒட்டங்களை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக கௌசால் சில்வா 125 ஒட்டங்களை பெற்று கொடுத்தார்.