எம்.எச்.370 விமான பாகம் கண்டுபிடிப்பு

Sunday, 02 August 2015 - 21:44

%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.370+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
காணாமல் போன எம்.எச்.370 விமானத்திற்குரியது என்று சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மடகஸ்காருக்கு அருகில் உள்ள லா ரியூனியன் தீவிலேயே இந்த பாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா செல்லும் போது காணாமல் போய் இருந்தது.

இதனைத் அடுத்து நீண்டகாலம் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் லா- ரீயூனியன் பகுதியில் இதன் பாகம் ஒன்று கடந்த தினம் கடலோர சுத்திகரிப்பாளர் ஒருவரால் மீட்கப்பட்டிருந்தது.

அது தற்போது பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அதே பகுதியில் மற்றுமொரு பாகமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.