ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைக்கும் வாய்ப்பு

Sunday, 27 September 2015 - 9:44

%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பில் இலங்கைக்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஆய்வுகளை நடத்தி இருந்தது.

தற்போது இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் நல்லுறவை பேணுவதுடன், யுத்தக்குற்ற விடயத்திலும் சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்பட இணங்கியுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன்படி ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு வழங்கப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.