மஹேலவுக்கு பாராட்டு

Sunday, 04 October 2015 - 14:12

%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
மஹேலஜெயவர்தனவின் கீழ் துடுப்பாட்ட பயிற்சிகளைப் பெறுவது பெறுமதியாவாய்ந்தது என்று, இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எதிரான தொடருக்காக, இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்ட ஆலோசனையை வழங்க இலங்கை வீரர் மஹேல ஜெயவர்தன இணைக்கப்பட்டுள்ளார்.

ஜெயவர்தனவின் 11 ஆயிரத்துக்கும் அதிகமான டெஸ்ட் ஓட்டங்களில், 9000 ஓட்டங்கள் வரையில் ஆசியாவிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே அதிக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அதேநேரம் பாகிஸ்தானுடனான தொடரை அடுத்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களிலும் பங்கேற்றகவுள்ளது.

இந்த விடயங்களை கருத்திக் கொண்டே மஹேல ஜெயவர்தன இந்த தொடருக்கான துடுப்பாட்ட ஆலோசனையை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவரது ஆலோசனைகளால் சிறந்த துடுப்பாட்ட தேர்ச்சியை வழங்கவதாக ஜேம்ஸ் டெயிலர் தெரிவித்துள்ளார்.