ஜனவரிக்கான விலைச்சுட்டெண் வீழ்ச்சி

Wednesday, 24 February 2016 - 7:41

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
2016 ஜனவரிக்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை, தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
இது கடந்த டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் குறிப்பிட்ட அளவு வீழ்ச்சியை காட்டுவதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மரக்கறி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி, பால்மா மற்றும் உடை, காலணி போன்ற உணவல்லாப் பொருட்களினால் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
போக்குவரத்து பிரிவில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.
 
எனினும் மீன், கருவாடு, எண்ணெய், மிளகாய் தூள், பருப்பு, முட்டை, சீனி ஆகியவற்றின் விலைகள் கடந்த டிசம்பர் மாதத்தை காட்டிலும் உயர்வடைந்திருந்ததாகவும்  தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்பட்டுள்ளது.