பிரபல நடிகையின் திருமணம் தொடர்பில் பரபரப்பு!!

Sunday, 25 December 2016 - 17:09

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21%21
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பல்வேறு நடிகைகள் தற்போது மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.

திருமணம் செய்துகொள்ளாமல் பிடித்தவருடன் டேட்டிங் செய்வது, பிடிக்காவிட்டால் பிரேக் அப் செய்துகொள்வது என்ற கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர்.

இதனால் திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயதை கடந்து பல நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா பட்டேல்.

தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். உங்களது திருமணம் எப்போது என்று கேட்டபோது தடாலடி பதில் அளித்தார். அவர் கூறியது: எனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான் எனது தேர்வாக இருக்கும்.

இதுவும் எனக்கேற்ற ஒருவரை சந்திக்கும்போதுதான் நடக்கும். 2030க்கு பிறகு திருமணம் என்ற சம்பிரதாயமே இருக்காது.

ஏனென்றால் பாரம்பரிய திருமணத்துக்கு பதிலாக பலதரப்பினரும் ஏற்கனவே மாற்று ஏற்பாடு கண்டுபிடித்து அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நிகிஷா பட்டேல் கூறினார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.