வறட்சியான காலநிலை ; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை...

Friday, 13 January 2017 - 7:24

%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%3B++%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
நாடெங்கிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதும், தடையற்ற மின்சாரத்தை விநியோக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மின்சரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர், இந்த காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.