இலங்கையில் நிலைமாறு நீதிவழங்கல் பொறிமுறை - ஆழமான கரிசனை

Friday, 13 January 2017 - 9:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88++-+%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
இலங்கையில் நிலைமாறு நீதிவழங்கல் பொறிமுறை தொடர்பில் ஆழமான கரிசனை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை அடிப்படையிலான போர்க்குற்ற விசாரணை நீதிமன்றத்தை நிறுவ, அரசாங்கம் தாமதம் காட்டியுள்ளது.

மேலும் இவ்வாறான பொறிமுறைகள் தொடர்பில் அரசாங்கம் ஏலவே வழங்கியுள்ள உறுதிமொழிகளை கைவிடும் வகையிலான கருத்துக்கள் அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன.

இவை நிலைமாறு நீதிவழங்கல் பொறிமுறையின் சுயாதீன தன்மை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.