காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடரும்

Saturday, 18 February 2017 - 13:23

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.

புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம், கடந்த 14 ஆம் திகதி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமாக தமது போராட்ட வடிவத்தை மாற்றி கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்த இந்த போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்வதாகவும், எனினும் தமக்கான தீர்வினை விரைவாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இது குறித்த படங்கள் இணைப்பு...







எமது பிராந்திய செய்தியாளர் சண்முகம் தவசீலன்