ஜெனீவாவில் முன்வைக்கப்படாத ஏழு அறிக்கைகள் தொடர்பில் ஜீ.எல்.பீரிஷ்...

Friday, 31 March 2017 - 13:21

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D...
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று, சர்வதேச போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிக்கைகள் ஏழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மகிந்த ஆதரவு தரப்பினரால் கூறப்பட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
எனினும் இந்த அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்க தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட இவ்வாறான அறிக்கைகளை பயன்படுத்த முடியும்.
 
ஆனால் அரசாங்கம் அநாவசியமாக ஜெனீவா பிரேரணைக்கு மீண்டும் இணை அனுசரணை வழங்கியமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.