மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை!

Friday, 31 March 2017 - 14:01

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
எந்த மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் கிழக்கில் மதுபான உற்பத்திசாலைகளை அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் வாழும் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு ஒரு போதும் துணை நிற்க போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை போதையற்ற மாகாணமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை இலக்காக் கொண்டு இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் பல்வேறுப்பட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.