கேப்பாப்புலவில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளன...

Friday, 31 March 2017 - 15:43

%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9...
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் 468 ஏக்கர் விஸ்தீரனமான காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கமைய கேப்பாப்புலவில் 248 ஏக்கர் அரச காணியும், 189 ஏக்கர் தனியார் காணியும் மற்றும் சீனியாமோட்டையில் 31 ஏக்கர் தனியார் காணியும் பாதுகாப்பு அமைச்சினால் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.