உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுப்பு..

Friday, 31 March 2017 - 16:32

+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திடுவதற்கு மத்திய மாகாணத்தின் கல்வி பணிப்பாளர் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ள உதவி ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பதுளை மாவட்டத்தின் ஆசிரிய உதவியாளர்களுக்கும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், அவர்களின் விண்ணப்பங்களில் கைச்சாத்திட மறுத்திருந்தார்.

எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் தொலைகல்வி முறை அடிப்படையிலான பயிற்சிக்கு இணைக்கப்படுவார்கள் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் நேற்று எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்களுக்கான வேதனத்தையும் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அவர் கூறியிருந்த பிரகாரம், கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் 2017-2018ம் ஆண்டுகளுக்கான வார இறுதி ஆசிரியர் கல்வி பாடநெறியைத் தொடர்வதற்கான தொலைகல்வி விண்ணப்பம் குறித்த அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.


அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,

பணிப்பாளர் (ஆசிரியர் கல்வி நிர்வாகம்)

கல்வியமைச்சு,

இசுறுபாய,

பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை www.moe.gov.lk  என்ற இணையத்தளத்துக்கு சென்று, அதில் தமிழ் மொழி பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.