மஹானாம, யஷோதரா வழக்கு சமரசம்..

Friday, 31 March 2017 - 16:32

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%2C+%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D..
கொழும்பு மஹானாம கல்லூரி மாணவர்கள் சிலர், கொழும்பு யஷோதரா மகளீர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தமது கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு 90 ஆயிரம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யஷோதரா கல்லூரியின் அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் ஏற்பட்டுள்ள நட்டஈடு வழங்குப்பட்டால் இந்த வழக்கை சமரசப்படுத்திக் கொள்ள தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சம்பவத்தால் ஏற்பட்டுள்ள நட்டத்தை வழங்க தயார் என மஹானாம கல்லூரியின் அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த நட்டஈடு வழங்கப்பட்டு பிரதான நுழைவாயில் மீள் திருத்தப்பட்டதா என விசாரிப்பதற்காக மே மாதம் 2 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.