வில்பத்து தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்...

Friday, 31 March 2017 - 21:43

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D...
வில்பத்து வனப்பகுதிக்கு வடக்கு திசையில் அமைந்துள்ள 04 வனப் பகுதிகளை பாதுகாப்பு வனமாக பிரகடனப்படுத்தி அண்மையில் ஜனாதிபதியால் கைச்சாதிடப்பட்ட வர்த்தானி அறிவித்தலை வைத்து சிலர் இனவாதத்தை தோற்றுவிக்க முற்படுவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் - முஸலி பிரதேச செயலகத்தில் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.