தேசிய நூதனசாலையில் திருடிய நபர் 5 வருடங்களின் பின்னர் பிணையில் விடுதலை...

Saturday, 01 April 2017 - 7:50

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...
தேசிய நூதனசாலை திருட்டின் பிரதான சந்தேக நபர், லங்சகே பிரியந்த மேதிஸ் என்ற கங்கெட்டா நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிணை நிபந்தனைகளுக்கு அமைவாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரூபாய் 5 லட்சம் தனியார் பிணை மற்றும் 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவரை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி, தேசிய நூதனசாலைக்குள் நுழைந்து அங்கிருந்த தங்க நாணயங்கள், நாணயத்தாள்கள், வாள், மோதிரங்கள், தண்டுகள் உடன் மேலும் சில பொருட்களை திருடியதாக சந்தேக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

2012 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி குறித்த நபர், நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் சந்தேக நபர், 5 வருடம் அளவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.