ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு!!

Saturday, 01 April 2017 - 8:04

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%21%21
பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட ஆபிரிக்க தீவான ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
 
பிரான்ஸ் அபிவிருத்தி திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த குழு அங்கு செல்கிறது.
 
இலங்கையும் ரியூனியனும் பல்வேறு விடயங்களில் ஒருமைத் தன்மையைக் கொண்டுள்ளன.
 
அதிக அளவான தமிழ் மக்கள் வாழும் தீவாகவும் ரீயூனியன் காணப்படுவதுடன், காலநிலை மற்றும் சுற்றாடலும் இலங்கையை ஒத்ததாக இருக்கிறது.
 
அங்கு சக்திவளத்துறைப் பயன்பாடு உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இலங்கையில் அமுலாக்கும் நோக்கில் இந்த குழு அங்கு செல்கிறது.
 
இன்று முதல் எதிர்வரும் 7ம் திகதி வரையில் குறித்த குழு அங்கு விஜயம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.