முன்னாள் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Thursday, 13 July 2017 - 13:33

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் ப்ரியத் பந்து விக்ரம உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த நீதிமன்ற தடையுத்தரவு இன்று நீக்கப்பட்டது.

அவர்களுடை சட்டத்தரணி விடுத்த கோரிக்கையையடுத்து இந்தத் தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் துறைமுக அதிகார சபையின் உழியர்கள் 319 பேர், பணியிலிருந்து விலக்கி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக, முன்னாள் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதெவேளை, அடுத்த வழக்கு விசாரணை செம்டெம்பர் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.