இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அறிவிப்பு

Monday, 07 August 2017 - 12:44

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வடக்கு முதல்வருக்கு நெருக்கடி கொடுக்காது, அமைச்சு பதவிகளை துறக்கவும் ஏற்காதிருக்கவும் தயார் என இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.
 
வடக்கு மாகாண அமைச்சரவையில் சீர்திருத்தம் மேற்கொள்ள மாகாண முதலமைச்சருக்கு பூரண அதிகாரம் அளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அண்மையில் இணக்கம் வெளியிட்டது.

இந்த நிலையில், முதல்வருக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்க, தாம் மாகாண அமைச்சு பதவிகளை துறக்கவும், ஏற்காமலும் இருக்க தீர்மானித்துள்ளாதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய நிலையில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு வினவியது.
 
அமைச்சு பதவிகளை ஏற்காவிட்டாலும், மக்களின் நலன் கருதி பூரண ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.