வரலாற்றில் தோன்றிய மிக மோசமான அரசாங்கம் இதுவே - ஜே.வி.பி

Monday, 07 August 2017 - 13:10

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+-+%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF
வரலாற்றில் தோன்றிய மிக மோசமான அரசாங்கம் தற்போதைய அரசாங்கமே என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
 
ஹம்பாந்தோடை சூரியவெவ பகுதில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
 
தற்போது இதனை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.
 
இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது போனால் வேறு எந்த ஒரு அரசாங்கத்தையும் கவிழ்க்க முடியாது.
 
இந்த அரசாங்கம், எருமையையும், பசுவையும் ஒரே ஏரில் பூட்டி வயல் உழுவதற்கு சமமான ஒன்றாகும்.
 
எருமை வயலுக்கும், பசு நிலத்திற்கும் இழுத்துக் கொண்டுச் செல்லும் தன்மையை கொண்டது.
 
இவ்வாறான நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் சென்றுக்கொண்டிருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
 
இதனிடையே, எத்தகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2025 ஆம் ஆண்டு வரையில் தற்போதைய அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.