O/L கணித புள்ளியில் மாற்றம் - A/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வௌியீடு!

Wednesday, 27 December 2017 - 14:58

O%2FL+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+A%2FL+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%21
இந்த முறை இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேகள் இன்று நள்ளிரவு இணையத்தில் வெளியாகவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்த முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் கணிதப்பாடத்துக்கான புள்ளி வழங்கும் கட்டமைப்பில் திருத்தம் மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சாதாரணத் தர கணிதப்பாட பரீட்சை எழுதிய மாணவர்கள் வினாத்தாள் தொடர்பில் சிக்கல்களை எதிர்நோக்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், குறித்த கணிதப்பாட வினாத்தாளை தயாரித்தவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில் குறித்த வினாத்தாளில் உள்ள சிக்கல் நிலையை கருத்தில் கொண்டு, அதற்கான புள்ளி வழங்கும் கட்டமைப்பில் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.