இராஜாங்க அமைச்சரானார் பியசேன கமகே!

Thursday, 28 December 2017 - 11:39

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%21

சட்ட ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக பியசேன கமகே  சத்தியபிரமானம் செய்துக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

காலி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் பதவி நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவரது இடத்துக்கு பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக உள்வாங்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான அவர், அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட நிலையில், அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கீதாகுமாரசிங்க மகிந்த அணியை பிரதிநிதித்துவப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.