ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி கருத்து..!!

Wednesday, 25 April 2018 - 13:15

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21%21
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அவநம்பிக்கை பின்னர் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைய காரணமாகவே, நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
பீ.பீ.சிக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
 
சாதாரணமாக ஒவ்வொரு அரசாங்கமும் அரசியல் யாப்புக்கு அமைய நாடாளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவந்துள்ளன.
 
இது புதியதோ அல்லது புதுமையடையக் கூடிய விடயமோ அல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தில் அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டதுடன், இணக்கமற்ற நிலைமை ஒன்றும் காணப்பட்டது.
 
ஜனநாயக நாட்டில் மிகவும் முக்கியமான நிறுவனம் நாடாளுமன்றமாகும்.
 
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில், அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இணக்கமான நிலைமை இருக்க வேண்டும்.
 
எனவே, நாடாளுமன்றத்தை இணப்பாட்டுடான இடமாக மாற்ற வேண்டி தேவை தமக்கு இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், அரசியல் ரீதியதாக புத்திகூர்மையற்றவர்களே, இது தொடர்பில் தவறான விமர்சனங்களை முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அவநம்பிக்கை பிரேரணையின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி,
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு என அதனைத் தாம் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில் அனைவரும் செயற்படுகின்றனர்.
 
குறித்த 16 பேரும் அமைச்சரவையிலிருந்து வெளியேறினர்.
 
எனினும், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
எவரும் தாம் விரும்பினால் அரசாங்கத்தில் இருக்க முடியும்.
 
விரும்பாவிட்டால், வெளியேற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.