இளைஞர்களின் கீழ்த்தரமான செயலுக்கான காரணம் வௌியானது!!

Wednesday, 26 September 2018 - 13:53

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21%21
வரலாற்று சிறப்பு மிக்க பிந்துராங்கல கல்லின் மேல் ஏறி நின்று அரைநிர்வாண புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இளைஞர்களை கைது செய்யவதற்காக காவற்துறையினரின் சிறப்பு குழுவொன்று கலேவெல மற்றும் குருணாகலை பிரதேசங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த புகைப்படத்தில் உள்ள இளைஞர்கள் கலேவெல மற்றும் குருணாகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் , குறித்த இளைஞர்களை கைது செய்வதற்காக காவற்துறை மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு பிரதேசவாசிகள் மற்றும் சுயாதீன அமைப்புக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதன் மூலம் முகப்புத்தகத்தில் தமக்கு கிடைக்கும் வரவேற்பை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் குறித்த இளைஞர்கள் இவ்வாறு பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.