அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு சந்திப்பு இன்று...!

Tuesday, 27 October 2020 - 8:14

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...%21
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியயோ தலைமையிலான குழுவினருக்கும், இந்திய உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இன்றைய தினமும் முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்திய - அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், ஆசிய நாடுகளுக்கான அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று இந்தியாவை வந்தடைந்தார்.

எதிர்வரும் 29 ஆம் திகதிவரையான ஆசிய விஜயத்தில், இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தோனோஷியா முதலான நாடுகளுக்கும் அவர் விஜயம் செய்கிறார்.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தலைமையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நேற்று டெல்லியல் ஆரம்பமான பேச்சுவார்த்தை இன்றும் தொடரவுள்ளது.

இதேநேரம், நேற்றைய தினம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது முக்கியத்துவம் மிக்க பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

இதேநேரம், இரு நாடுகளினதும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டு சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.