இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பம்

Saturday, 27 March 2021 - 20:53

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

நேரடி வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார அபிவிருத்தியின் தீர்மானம் மிக்க சக்தியாக அமைந்தாலும், கடந்த சில வருடங்களில் பல்வேறு முதலீட்டாளர்களை நேரடி இலக்காகக் கொள்ளும் மூலோபாயங்களை இனங்கண்டிருக்காமையால் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்கும் செயன்முறை பலவீனமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டுத் தொகையாக கிடைக்கப்பெற்றுள்ளது

எனவே, முதலீட்டுக்கு பொருத்தமான உபசரிப்பு நாடாக இலங்கையை கவர்ந்திழுப்பதற்காக, உரிய திட்டங்களுடன் இசைவு மற்றும் கேந்திரமான சந்தைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தும் தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்னணி சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் சேவையை பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.