Top Story
அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் (Chris Wright) மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் ஆகியோர் அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும், அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சவூதி அணுசக்தித் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு "பெரிய அளவிலான அணுகலை" அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் வழங்கும்.

இந்த ஒப்பந்தமானது "அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்" மற்றும் "இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்" ஆகிய இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்டுள்ளது.

உலகளாவிய அணு ஆயுதப் பரவல் தடுப்பு தரநிலைகளை இது வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் தற்போது மதிப்பாய்வுக்காக அமெரிக்க காங்கிரஸுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அமெரிக்க எரிசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவலுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிலும், மத்திய கிழக்கின் முக்கிய பங்காளியான இஸ்ரேலிலும் எழுந்துள்ளது. இதற்கு முன்பு ஐக்கிய அரபு இராச்சியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் மிகவும் கடுமையான ஆய்வுக் கட்டுப்பாடுகளையும், சொந்தமாக அணு எரிபொருள் உற்பத்தி செய்யும் உரிமையற்ற தன்மையையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளரான மார்க்கோ ரூபியோ (Marco Rubio), உலகளவில் அணு ஆயுதப் பரவலுக்கான எந்தவொரு ஆபத்தையும் விளைவிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா ஈடுபடாது எனத் தெரிவித்தார்.
விபரங்களுக்கு
International23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.
Video of the Day
Latest TV News Bulletin
Most Top News

கண்டியின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு!

General 23 July 2026
கண்டியின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு!

வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவிப்பு

General 23 July 2026
வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறப்பது வீழ்ச்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எழுத்தாணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு!

General 23 July 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எழுத்தாணை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு!

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு, மன்னார்: நாடாளுமன்றில் விசேட தலையீட்டை வலியுறுத்தினார் ரவிகரன்!

General 23 July 2026
சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு, மன்னார்: நாடாளுமன்றில் விசேட தலையீட்டை வலியுறுத்தினார் ரவிகரன்!

நாடாளுமன்றத்தில் 43வது கருப்பு ஜூலை நினை வேந்தல் : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை!

General 23 July 2026
நாடாளுமன்றத்தில் 43வது கருப்பு ஜூலை நினை வேந்தல் : தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதனை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!

General 23 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!
International News

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை

International 23 July 2026
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை

'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!

International 23 July 2026
'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!

வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

International 23 July 2026
வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!

International 23 July 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!

"யாருமே தப்ப முடியாது" : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு - பிரதமர் மோடி

International 23 July 2026
"யாருமே தப்ப முடியாது" : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு - பிரதமர் மோடி

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

International 23 July 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

International 23 July 2026
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!

International 23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!

வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்

International 23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.

International 23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.

போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!

International 23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!

நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!

International 23 July 2026
நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!

ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

International 22 July 2026
ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மஞ்சூரியன் தட்டில் எலி : சிக்கிய திடுக்கிடும் உண்மை!

International 22 July 2026
மஞ்சூரியன் தட்டில் எலி : சிக்கிய திடுக்கிடும் உண்மை!

வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!

International 22 July 2026
வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!
More News
General23 July 2026

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி எழுத்தாணை மனு! - மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்காது தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டி, பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர் தரப்பினரால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விபரங்களுக்கு
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி எழுத்தாணை மனு! - மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
General23 July 2026

9 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை காரணமாக, 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23) எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டம் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
9 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் எச்சரிக்கை
General23 July 2026

அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.

விபரங்களுக்கு
அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!
General23 July 2026

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்

இரத்த பரிசோதனைக்காக அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில், கந்தர்மடம் சந்திக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் முழு இரத்தப் பரிசோதனைக்காக அறவிடக்கூடிய அதிகபட்ச கட்டணமாக 400 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் மருத்துவமனை , இந்தப் பரிசோதனைக்காக ரூ. 550/- வீதம் கட்டணம் அறவிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. இதனையடுத்தே குறித்த நிறுவனத்திற்கு ரூ. 30 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த விதிமீறல் தொடர்பான விபரங்களை தனது சொந்தச் செலவில் நாட்டின் முக்கிய நாளிதழ்களில் அறிவித்தலாக வெளியிடுமாறும் அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் சரியான கட்டணச் சீட்டைப் பெற்றுக் கொள்வது அவர்களின் உரிமையாவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அது முக்கிய ஆதாரமாகவும் பயன்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாகக் கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : 30 இலட்சம் ரூபாய் அபராதம் - யாழில் சம்பவம்
General23 July 2026

பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் மாற்றம் : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்!
International News

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை

International 23 July 2026
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை

'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!

International 23 July 2026
'ஜனநாயகன்' படம் பார்க்க வந்த இடத்தில் கதறி அழுத தவெக நிர்வாகி : திரையரங்கில் நெகிழ்ச்சியான தருணம்!

வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

International 23 July 2026
வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!

International 23 July 2026
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த நடிகை த்ரிஷா!

"யாருமே தப்ப முடியாது" : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு - பிரதமர் மோடி

International 23 July 2026
"யாருமே தப்ப முடியாது" : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு - பிரதமர் மோடி

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

International 23 July 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி : உலக சந்தையில் மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை மீண்டும் உயர்வு

செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

International 23 July 2026
செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம் : சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!

International 23 July 2026
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியீடு: உலகம் முழுவதும் ரசிகர்கள் கோலாகலக் கொண்டாட்டம்!

வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்

International 23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.

International 23 July 2026
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையே பாதுகாப்பான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது!.

போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!

International 23 July 2026
போர் பிராந்திய முழுவதும் பரவும் அல்லது அனைத்து நாடுகளும் சிக்கிக் கொள்ளும்: ஈரான் எச்சரிக்கை!

நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!

International 23 July 2026
நம்பிக்கை துரோகம் செய்த நவீன தொழில்நுட்பம்: சொந்தச் சோதனையிலேயே எல்லை மீறிய ஓப்பன் ஏஐ மாதிரி!

ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

International 22 July 2026
ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மஞ்சூரியன் தட்டில் எலி : சிக்கிய திடுக்கிடும் உண்மை!

International 22 July 2026
மஞ்சூரியன் தட்டில் எலி : சிக்கிய திடுக்கிடும் உண்மை!

வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!

International 22 July 2026
வெப்பத்தை வெறும் 5 நிமிடத்தில் விரட்டும் புதிய சாதனம் : மனிதர்களைக் குளிர்விக்க ஒரு மனித குளிரூட்டி!
Sports Stories
Explore More
சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்

சச்சினின் சாதனையை முறியடித்து சர்வதேச சாதனையை படைத்த வைபவ்

இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் பெற்ற சாதனையை இந்தியாவின் இளம் வயது கிரிக்கட் வீரர் வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.வைபவ் சூரியவன்ஷி சர்வதேச 20க்கு20 போட்டியில் தமது முதல் அரை சதத்தை பெற்றதன் மூலம் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.ஸிம்பாப்வே அணிக்கு எதிராக இன்று ஹராரேயில் நடைபெற்ற முதல் 20க்கு20 போட்டியிலேயே அவர் அரை சதத்தை பெற்றுள்ளார்.18 பந்துகளில் அவர் 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் 19வது பந்தில் ஆட்டமிழந்தார்.இதற்கு முன்னதாக சர்வதேச போட்டி ஒன்றில் இளவயதில் அரை சதத்தை பெற்ற சாதனையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் கொண்டிருந்தார்.அவர் 1989 ஆம் ஆண்டில் 16 வயதாக இருக்கும்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமது சர்வதேச முதல் அரை சதத்தை பெற்றிருந்தார்.இந்தநிலையில், 15 வயதான சூரியவன்ஷி சச்சினின் சாதனையை சர்வதேச அளவில் முறியடித்துள்ளார்.முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 13.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.

விபரங்களுக்கு
அவுஸ்திரேலியாவிற்குப் பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - 2027 ஏஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

அவுஸ்திரேலியாவிற்குப் பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? - 2027 ஏஷஸ் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

கிரிக்கெட் உலகின் மிகவும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்றான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2027ஆம் ஆண்டுக்கான ஏஷஸ் டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை நடத்துகிறது.இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை டிரெண்ட் பிரிட்ஜ் (Trent Bridge) மைதானத்தில் நடைபெறவுள்ளது.முன்பாக நடைபெற்று முடிந்த ஏஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது.அந்த வெற்றிகரமான பயணத்தின் மூலமாக உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் அவுஸ்திரேலியா தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இங்கிலாந்து - அவுஸ்திரேலிய ஏஷஸ் தொடருக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு

ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் வெறும் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்டுள்ளார். புதிய தரவரிசையின்படி, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரல் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். அவரை விட ஒரே ஒரு புள்ளி குறைவாக, அதாவது 801 புள்ளிகளைப் பெற்றுள்ள சுப்மன் கில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி (767 புள்ளிகள்) மற்றும் ரோஹித் சர்மா (758 புள்ளிகள்) முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களிலும், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் (712 புள்ளிகள்) ஐந்தாம் இடத்திலும் நீடிக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் முறையே 6 மற்றும் 7 ஆம் இடங்களை பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜோ ரூட் அபாரமான நகர்வை வெளிப்படுத்தி 4 இடங்கள் முன்னேறி, முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார். அவர் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் சார்பில் பிரதானமாக இடம்பெற்றுள்ள சரித் அசலங்க, 659 புள்ளிகளுடன் ஒரு இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
ரசிகர்களின் மனதைக் கவர்ந்த யமாலின் தம்பி கெய்ன்!

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த யமாலின் தம்பி கெய்ன்!

கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணி இரண்டாவது முறையாக கால்பந்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள நிலையில், போட்டியை விட ஸ்பெய்ன் வீரர் லமின் யமாலின் 3 வயது தம்பி 'கெய்ன் யமால்' இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளார்.போட்டிதோறும் தனது குறும்பான செயல்களாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த கெய்ன், இந்த கால்பந்து உலகக் கிண்ணத்தின் எதிர்பாராத வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளார்.ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியைக் கொண்டாடிய விதம், காலிறுதியில் மைதானத் திரையில் கை அசைத்து சேட்டை செய்தது மற்றும் இறுதிப்போட்டியில் காவல்துறை அதிகாரியின் தொப்பியை அணிந்து வலம் வந்தது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன."எனக்குக் கிடைக்காத குழந்தைப் பருவம் என் தம்பிக்குக் கிடைக்கிறது. என் தம்பி எனக்கு எல்லாமே, அவர் என் மகனைப் போன்றவர்" என்று லமின் யமால் அண்மையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயார் - வைபவ் சூர்யவன்ஷி

வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயார் - வைபவ் சூர்யவன்ஷி

கடந்த சில மாதங்களாகப் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடத் தன்னம்பிக்கை குறையவில்லை என இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இளைய சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பெப்ரவரி மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ஓட்டங்களைக் குவித்து இந்தியா கிண்ணத்தை வெல்லக் காரணமான அதே ஹராரே மைதானத்தில் மீண்டும் விளையாடுவது தனக்கு மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார். பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியினரின் ஆதரவுடன் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அணியின் வெற்றிக்குத் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபரங்களுக்கு
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ரஹ்மத் ஷா நியமனம்!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ரஹ்மத் ஷா நியமனம்!

ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக ரஹமத் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் அணித்தலைவராக கடந்த 2022ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.அவரது தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி செம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தினார்.அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக ஷாஹிடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளேன் என ஷாஹிடி தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருநாள் அணிக்கு புதிய அணித்தலைவராக ரஹமத் ஷாவை நியமனம் செய்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

விபரங்களுக்கு
கால்பந்து தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!

கால்பந்து தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்பெய்ன் அணி!

கால்பந்து உலகக்கிண்ணப் போட்டி முடிவடைந்ததையடுத்து சர்வதேச கால்பந்து சங்கம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரவரிசைப்படி ஆர்ஜென்டினாவை வீழ்த்தி உலக செம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற ஸ்பெய்ன் ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேவேளை ஒரு இடம் பின் நகர்ந்து 2ஆவது இடத்தை ஆர்ஜென்டினா பெற்றுள்ளது. அதேபோல் 3ஆவது இடத்தில் பிரான்ஸும் 4ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 5ஆவது இடத்தில் பிரேசிலும், 6ஆவது இடத்திலும் மொராக்கோவும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.கால்பந்து உலகக்கிண்ணப் போட்டியில் 3ஆவது சுற்றுடன் வெளியேறிய போர்த்துக்கல் அணி 5ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இதேவேளை 4 முறை செம்பியனான ஜேர்மனி இரு இடம் பின் தங்கி 12-வது இடத்தில் இருக்கிறது. காலிறுதி வரை முன்னேறி கவனத்தை ஈர்த்த நோர்வே 12 இடங்கள் பின்தள்ளப்பட்டு 19ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை சிறிய அணியான கேப்வெர்டே 3 இடம் உயர்ந்து 64ஆவது இடத்தை பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
ஆர்ஜென்டினாவுக்கு எதிரான விமர்சனப் பதிவு - ரொனால்டோ 'லைக்' செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பரபரப்பு!

ஆர்ஜென்டினாவுக்கு எதிரான விமர்சனப் பதிவு - ரொனால்டோ 'லைக்' செய்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பரபரப்பு!

கால்பந்து உலகக்கிண்ணத்தொடரில் ஆர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு உதவியதாக குற்றம் சாட்டிய இன்ஸ்டாகிராம் பதிவுக்கு, போர்த்துக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ 'லைக்' செய்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கால்பந்து உலகக்கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்பாக,ஆர்ஜென்டினா அணிக்குத் தொடரில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியிடப்பட்டது.அதில் பேசிய ஸ்பெயின் பத்திரிகையாளர் பிலார் ரோட்ரிக்ஸ் லொசாண்டோஸ், "கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் குழுவினரின் உதவியால்தான் ஆர்ஜென்டினா தொடரில் நீடிக்கிறது. லியோனல் மெஸ்சிக்கு கால்பந்து உலகக்கிண்ணத்தை வழங்கவே அவர்கள் விரும்புகிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.இந்த பதிவுக்கு ரொனால்டோ 'லைக்' செய்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இருப்பினும் ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அந்த பதிவுக்கு 'லைக்' செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரொனால்டோவோ அல்லது அவரது தரப்போ இதுவரை எந்தவிதமாக உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More
'ஜன நாயகன்' படத்தின் இறுதிக்காட்சி - ரசிகர்களைக் கண்கலங்க வைத்த விஜய்யின் நெகிழ்ச்சி காணொளி!

'ஜன நாயகன்' படத்தின் இறுதிக்காட்சி - ரசிகர்களைக் கண்கலங்க வைத்த விஜய்யின் நெகிழ்ச்சி காணொளி!

ஜன நாயகன் திரைப்படத்தின் இறுதியில் இடம்பெற்ற சிறப்பு காணொளி ரசிகர்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' இன்று (23) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற தலைப்பு அட்டையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச.ஜோசப் விஜய்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை நோக்கி முதலமைச்சர் விஜய் கையை வைத்துச் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.திரைப்படம் நிறைவடைந்ததும், விஜய்யின் ஆரம்பகாலத் திரைப்படத் தோற்றங்கள் முதல் 'ஜன நாயகன்' வரை அவர் நடித்த பல்வேறு திரைப்படத் தோற்றங்கள் அடங்கிய சிறப்பு காணொளி ஒன்று திரையிடப்பட்டது.இசையமைப்பாளர் அனிருத்தின் 'பிரியாவிடை' பாடல் பின்னணியில் ஒலிக்க, காணொளியின் இறுதியில் "பிரியமுடன் விஜய்" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது திரையரங்கில் இருந்த ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.பலரும் உணர்வுபூர்வமாக இருப்பதாகக் கூறி குறித்த காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விபரங்களுக்கு
'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிழற்படங்களுடன் பூஜா ஹெக்டே நெகிழ்ச்சிப் பதிவு!

'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிழற்படங்களுடன் பூஜா ஹெக்டே நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பில் எடுத்த நிழற்படங்களை பகிர்ந்து, “உங்களின் ஹலமிதி ஹபிபோ” எனக் கூறியுள்ளார்.நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.திரைப்படம் வெளியாகியுள்ள நிலவரத்தில், நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜன நாயகன்' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நிழற் படங்களைப் பகிர்ந்துள்ளார்.அந்தப் பதிவில், “வெளியீட்டுத் திகதி வந்துவிட்டது. கடைசியாக ஒருமுறை, கடைசியான ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ... கல்யாணி மற்றும் வெற்றி” எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.'ஜன நாயகன்' திரைப்படத்தில் விஜய் 'வெற்றி' என்ற கதாபாத்திரத்திலும், பூஜா ஹெக்டே 'கல்யாணி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.முன்பாக, விஜய் மற்றும் பூஜா ஹெக்டே கூட்டணியில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'அரபிக் குத்து' (ஹலமிதி ஹபிபோ) பாடல் மற்றும் நடனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
காசோலை மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

காசோலை மோசடி வழக்கு : நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

காசோலை மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்த் திரைப்பட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக நடிகர் விமல், 4.5 கோடி இந்திய ரூபாய் கடனாகப் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் வழங்கிய காசோலை, வங்கியில் போதிய நிதி இல்லாத காரணத்தால் திரும்பியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபரங்களுக்கு
தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.நீட் பரீட்சை முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று (23) தனது 51ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 'நேருக்கு நேர்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் கடந்த மாதம் 20ஆம்திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களது போராட்டம் 33ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நீட் பரீட்சைக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக அவரது ரசிகர் மன்றம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
எம்.ஜி.ஆருக்குப் பின் புதிய வரலாறு - முதலமைச்சரான பின் வெளியான விஜய்யின் 'ஜனநாயகன்'!

எம்.ஜி.ஆருக்குப் பின் புதிய வரலாறு - முதலமைச்சரான பின் வெளியான விஜய்யின் 'ஜனநாயகன்'!

தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது சுமார் 50 ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் மூலமாக மீண்டும் நிகழ்ந்துள்ளது.எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது திரைப்பயணத்தை 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் நிறைவு செய்கிறார் என்பதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை எட்டியிருந்தது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் வெளியீட்டைத் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர்.கடந்த 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான 'மீனவ நண்பன்' (1977) மற்றும் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' (1978) ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தன.அதன்பின்னர், தற்போதைய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் போஸ்டரில் "சஞ்சய் விஸ்வநாத்" (Sanjay Vishwanath) என்ற கதாபாத்திரத்தின் பெயருடன் நடிகர் சூர்யாவின் தோற்றம் இடம்பெற்றுள்ளது. நடிகர் சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய போஸ்டர், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விபரங்களுக்கு
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!

எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!

மாணவர்களின் கல்விச் சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது தாம் மும்பை காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டதாக பொலிவுட் நடிகையான ஆயிஷா கான் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்களின் போராட்டப் பகுதிக்கு அருகில் அமைதியான முறையில் நின்றுகொண்டிருந்த வேளையில், தனது சகோதரரும் நண்பர்களும் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து தான் அங்கு காத்திருந்ததாகவும், எவ்வித சட்டத்தையும் மீறாத போதிலும் காவல்துறையினர் தன்னை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளிகள் மூலம் தெரிவித்துள்ளார். காவல்துறை வாகனத்திற்குள்ளும், பின்னர் வொர்லி காவல் நிலையத்திலிருந்தும் அவர் வெளியிட்ட இந்தக் காணொளிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளன. கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், நடிகை ஆயிஷா கானின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மும்பை காவல்துறை தரப்பிலிருந்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

விபரங்களுக்கு
'ஜனநாயகன்' வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

'ஜனநாயகன்' வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கூறப்படும் 'ஜனநாயகன்' நாளை (23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் அலுவலகப் பணிகள் வழக்கம்போல தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////