ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்தனர்

Saturday, 11 September 2021 - 21:55

%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%2C+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%2C+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்துள்ளனர்.

இண்டியன் ப்றீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள அவர்கள் 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் உயிர் குமிழி முறைமைக்குள் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்து அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளனர்.

ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை எனவும் மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.