27 பேர் பலியான பின்னரும் ஆங்கில கால்வாய் ஊடாக பலர் ஆபத்தான பயணம்

Thursday, 25 November 2021 - 22:26

27+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தில் 27 பேர் உயிரிழந்த பின்னரும், பெருமளவானோர் அந்தக் கால்வாயில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்தாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஆங்கிலக் கால்வாயின் கலேஸ் (Calais ) பகுதியில், நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் 17 ஆண்கள், ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட ஏழு பெண்கள், மூன்று சிறுவர்கள் என 27 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டோவர் (Dover) பகுதிக்கு அருகில், இன்று காலை அதிகளவானோர் உயிர் பாதுகாப்பு அங்கியை அணிந்தவாறு படகில் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.