யூனியன் அஷ்யூரன்ஸ் ஒப்பற்ற வாடிக்கையாளர் நோக்குடன், 2023 முதல் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது

Thursday, 15 June 2023 - 16:01

%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%2C+2023+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், 2023 முதல் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சவால்கள் நிறைந்த தொழிற்படு சூழலிலும், சகல பிரதான வினைத்திறன் அளவுகோல்களிலும் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்ததனூடாக, தனது பங்காளர்களுக்கு ஒப்பற்ற பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நிறுவனம் கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பு
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வரிக்கு முந்திய இலாபத்தில் 117% அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், 2022 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த 279 மில்லியனிலிருந்து 2023 முதல் காலாண்டில் 605 மில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது.

இந்த உயர் வளர்ச்சியினூடாக நிறுவனத்தின் தந்திரோபாயத் திட்டங்கள் மற்றும் சந்தையில் காணப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளல்கள் ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

நிறுவனத்தின் மொத்த தேறிய வருமானம் முன்னைய நிதியாண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த 4.7 பில்லியனிலிருந்து 2023 முதல் காலாண்டில் 6.5 பில்லியனாக 37% உயர்ந்திருந்தது.

அதனூடாக நிலைபேறான வளர்ச்சி தொடர்பில் நிறுவனத்தின் நோக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸின் தேறிய முதலீட்டு வருமானமும் துரித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

2022 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 1.4 பில்லியனிலிருந்து ரூ. 2.4 பில்லியனாக உயர்ந்திருந்தது.

இதனூடாக, முதலீடுகளை நிர்வகிப்பதில் நிறுவனம் கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் காப்புறுதிதாரர்கள் மற்றும்
பங்குதாரர்களுக்கு உயர் வருமதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் காணப்படும் ஆற்றல்கள் உறுதி
செய்யப்பட்டிருந்தன.

மேலும், 2022ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், நிகர
வழங்கிய தவணைக்கட்டணம் மற்றும் தேறிய வழங்கிய தவணைக்கட்டணம் ஆகியனவும்
வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன.

இதில் நிகர வழங்கிய தவணைக்கட்டணம் ரூ. 3.9 பில்லியனிலிருந்து ரூ. 4.2 பில்லியனாகவும், தேறிய வழங்கிய தவணைக்கட்டணம் ரூ. 3.8
பில்லியனிலிருந்து ரூ. 3.9 பில்லியனாகவும் வளர்ச்சியடைந்திருந்தது.

மேலும், நிறுவனத்தின் உறுதியான நிதிப் பெறுபேறுகளை உறுதி செய்யும் வகையில், நிகர வழங்கிய தவணைக் கட்டணம்
4.8% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துறைசார் சராசரி பெறுமதியை விட விஞ்சும் வகையில் அமைந்திருந்தது. சந்தை மூலதனவாக்கப் பெறுமதி
என்பதும் 2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் ரூ. 16.4 பில்லியனிலிருந்து ரூ. 19.4 பில்லியனாக உயர்ந்திருந்தது. இது 18% வளர்ச்சியாகும்.

உரிமைகோரல்களை நிறைவேற்றும் கடப்பாட்டை உறுதி செய்யும் வகையில், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 1.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 1.6 பில்லியன் பெறுமதியான உரிமைகோரல்கள்
செலுத்தப்பட்டிருந்தன.

நிறுவனத்தின் சிறந்த தொழிற்பாட்டு வினைத்திறன் பெறுபேறுகளினூடாக அதன் வெற்றிகரமான செயற்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டிருந்தது. செயற்பாடுகளினூடாக இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 122% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன்,
ரூ. 240 மில்லியனிலிருந்து ரூ. 534 மில்லியனாக உயர்ந்திருந்தது. பங்கொன்றின் மீதான வருமதி ரூ. 0.37 முதல் ரூ. 0.75 ஆக உயர்ந்திருந்தது. இது 105% அதிகரிப்பு என்பதுடன், பங்காளர் பெறுமதியை மேலும் உயர்வடையச் செய்திருந்தது.

நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 2023 மார்ச் மாத இறுதியில் ரூ. 79 பில்லியனாக உயர்ந்திருந்தது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பெறுமதி ரூ. 76 பில்லியனாக காணப்பட்டது.

மார்ச் மாத இறுதியில் மூலதன போதுமை விகிதம் 245% ஆக காணப்பட்டதுடன், ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல்
தேவைப்பாட்டை விட உயர்வாக காணப்பட்டது.

மேலும், ஆயுள் காப்புறுதி நிதியம் ரூ. 57.3 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், உறுதியான நிதிசார் அடித்தளத்தையும் பிரதிபலித்திருந்தது.

உறுதியான நிதிப் பெறுபேறுகளுக்கு மேலதிகமாக, டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளில் நிறுவனத்தின் கவனம் செலுத்துகையினூடாக, புத்தாக்கத்தை முன்னெடுத்து, புதிய தொழிற்துறை நியமங்களை ஏற்படுத்தி, தொழில்துறையில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை முன்னிலையில் திகழச் செய்யக்கூடியதாக இருந்தது.

புரட்சிகரமான Clicklife App ஊடாக, வாடிக்கையாளர் அனுபவங்கள் தொடர்ந்தும் மாற்றியமைக்கப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு
தம்மையும், தமது வாழ்க்கைமுறைகளையும் பாதுகாத்துக் கொள்ள பரிபூரண, ஒப்பற்ற கட்டமைப்பை வழங்கியிருந்ததுடன், வலுவூட்டியிருந்தது. மேலும், யூனியன் அஷ்யூரன்ஸின் தூரநோக்கு சிந்தனை கொண்ட பெறுமதிகளினூடாக, நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னேற்றப்
பாதையில் வழிநடத்திச் செல்ல முடிந்ததுடன், ஒரு நாளினுள் 90% ஆன உரிமைகோரல்கள்
செலுத்தப்பட்டிருந்ததுடன், 100% கடதாசி பாவனையற்ற காப்புறுதி பிரேரணை சமர்ப்பிப்புகள்
மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் விநியோக தந்திரோபாயங்கள் பின்பற்றப்பட்டிருந்தன.


யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் குறிப்பிடுகையில், “2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எமது சிறந்த நிதிப் பெறுபேறுகளினூடாக, எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நிலைபேறான பெறுமதி மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்குவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் வினைத்திறன் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

எமது உறுதியான வளர்ச்சியினூடாக, சந்தையில் நாம் கொண்டிருக்கும் உறுதியான நிலை மற்றும் துரிதமாக வளர்ந்து வரும் துறையில் காணப்படும் வாய்ப்புகளை கையகப்படுத்தும் எமது ஆற்றல் போன்றவற்றை எய்தக்கூடியதாக உள்ளது.

புத்தாக்கம், செயற்பாட்டுச் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்திய செயற்பாடுகள் போன்ற எமது தந்திரோபாய அரண்களில் நாம் கவனம் செலுத்துவதுடன், எம்மை தொடர்ந்தும் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆயுள் காப்புறுதியை அதிகளவில் அணுகச் செய்வது மற்றும்
வாடிக்யைாளர்களுடன் ஈடுபாட்டைக் கொண்டிருப்பது போன்றவற்றில் எமது டிஜிட்டல்
மாற்றியமைப்பு பயணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

இலங்கையில் ஆயுள் காப்புறுதி அனுபவத்தை புரட்சிகரமானதாக அமைந்திருக்கச் செய்வதில் நவீன
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாம் அதீத ஈடுபாட்டைக் கொண்டுள்ளோம். டிஜிட்டல்
புத்தாக்கத்தை பின்பற்றி, எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை நாம்
ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஒப்பற்ற அனுபவங்களை வழங்குவோம்.” என்றார்.


யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத்
தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் மீது எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள்
கொண்டிருந்த நம்பிக்கை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாம் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்வதற்கு அவர்களின் ஆதரவு முக்கிய பங்காற்றியிருந்தது.

எமது சிறந்த பெறுபேறுகளை எய்துவதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்த எமது அர்ப்பணிப்பான அணியினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களின் கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு போன்றன எமது வெற்றிகரமான
செயற்பாட்டில் முக்கிய பங்காற்றியிருந்தன.” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “எமது நாட்டின் பாதுகாப்பு இடைவெளியை குறைப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

அதனூடாக தனிநபர்கள்மற்றும் குடும்பத்தாருக்கு அவசியமான நிதிப் பாதுகாப்பை கொண்டிருப்பதை உறுதி செய்கின்றோம். மிகவும் முக்கியமான அம்சத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்யும் பரிபூரண பாதுகாப்புத் தீர்வுகளை நாம் வழங்குகின்றோம். இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வலைகளை வழங்கி வலுவூட்டி, அவர்களின் கனவுகளை நோக்கி பயணிப்பதற்கு கைகொடுப்பது எமது நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் காணப்படுகின்றது. இதனை நிறைவேற்ற நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.

பாதுகாப்பு, முதலீடு, ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் தீர்வுகளைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் அதிகளவு விருதுகளை வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கின்றது.

இதில், 2022 ஆம் ஆண்டின் இலங்கையின் அதிகளவு விரும்பப்படும் வர்த்தக நாமங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமை அடங்கலாக, 15 க்கும்
அதிகமான பாரிய சர்வதேச மற்றும் தேசிய விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.