இந்த மாதத்தில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு

Friday, 30 June 2023 - 22:57

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+84%2C000+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இந்த மாதத்தின் முதல் 26 நாட்களில் 84 ஆயிரத்து மூன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அமைய இதுவரை இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகளில் இந்திய பயணிகளின் எண்ணிக்கை, 28 சத வீதமாக பதிவாகியுள்ளது.

ரஷ்யா இரண்டாவது இடத்திலும், பிரித்தானியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதுதவிர, ஜேமனி மற்றும் சீன சுற்றுலா பயணிகளும் கணிசமான அளவு வருகை தந்துள்ளனர்.

கனடா, மாலை தீவு, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த காலத்தை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.