பிரசித் கிருஷ்ணா முக்கியமான போட்டிகளில் இடம்பெறுவதில் சந்தேகம்?

Saturday, 13 January 2024 - 22:13

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3F
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, எதிர்வரும் சில முக்கியமான போட்டிகளில் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குஜராத்துக்கு எதிரான ராஞ்சி கிண்ணப் போட்டியின்போது, நேற்றைய தினம் கர்நாடகா அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா உபாதைக்கு உள்ளானார்.

அவரது ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் இதுவரையில் வெளியாகவில்லை.

இந்தநிலையில், இந்தியாவில் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் அவரது இருப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எவ்வாறாயினும், அவரது காயம் மற்றும் அதன் தீவிரத்திற்கு ஏற்ப குணமடைய குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வேகபந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, கர்நாடகா அணியின் வைத்தியர்களினது பராமரிப்பில் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.